Friday, 23 November 2012

ஈராண்டறிக்கை


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் -C
குமரிகோட்டம், நாகர்கோவில் -629001.

ஈராண்டறிக்கை
10-10-2010 முதல் 09-12-2012 வரை
அன்பார்ந்த தோழர்களே! தோழியரே !!

இனிய மாநாட்டு நல வாழ்த்துக்கள்.

நமது கோட்ட சங்கத்தின் 39 வது கோட்ட மாநாட்டிற்கான ஈராண்டறிக்கையினை செயற்குழுவின் சார்பாக இந்த பேரவையின்
முன் சமர்ப்பிப்பதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கின்றேன்.
அஞ்சல் ஊழியர்களின் அன்புத்தலைவர் NCA  அவர்கள் காட்டித்தந்த
நேரிய பாதையில் குமரிதந்த கொள்கைச் சிங்கம்  அஞ்சாநெஞ்சன்
அண்ணன் பாலு அவர்களின் சீரிய ஆலோசனைகளினாலும் குமரிக்கோட்ட அஞ்சல் ஊழியர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றுத் திகழும் அன்புத்தலைவர்கள் BALM ஆனந்தராஜ் மற்றும் S  பகவதிபெருமாள் ஆகியோரின் சிறப்பான வலிகாட்டுதல்களினாலும் நமது கோட்டச்சங்கம்  பீடு நடை போட்டுவருகிறது. அனைத்திந்திய போராட்டங்கள், மாநில மற்றும் கோட்டமட்ட இயக்கங்கள் அனைத்திலும் தலைமையின் ஆணைக்கு
இணங்க கட்டுக்கோப்புடன் கலந்துகொண்டு அத்துணை செயல்பாடுகளிலும்
என்னோடு உறுதியுடன் ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்கையாக்கி இந்த ஈராண்டறிக்கையினை சமர்ப்பிக்கிறேன்.
 

No comments:

Post a Comment